வெண்ணிற இரவுகள் – Vennira Iravugal


Price: ₹77.77
(as of Apr 26, 2024 13:25:52 UTC – Details)



வெண்ணிற இரவுகள் – 175 ஆண்டுகளுக்கு முன்பு 1848இல் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய (குறு)நாவல். காதலை அதன் அத்தனை பரிமாணங்களிலும் இக்கதையின் கதாபாத்திரங்களின் வழியே பொங்கி பிரவகித்திருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. தற்போது வாசிக்கும்போதும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியவையாக நாம் உணர்கிறோம். உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகவும் அதிகம் வாசிக்கப்படும் நாவலாகவும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. தமிழில் ரா. கிருஷ்ணையாவின் மொழிபெயர்ப்பு நமக்கு கவித்துவமான நடையில் உண்மையிலேயே காதல் பித்தேற்றுகிறது. பெண் ஓரு ஆணுக்குச் செய்யும் மிக மென்மையான, நிரந்தர வடுவைத் தரக்கூடிய ஆனால், தவிர்க்கவே முடியாத ஒரு துரோகம் இந்த நாவலில் உள்ளுறைந்துள்ளது. அந்தத் துரோகத்தை ஓர் ஆண் விரும்பவும் செய்கிறான். அந்தத் துரோகத்தைச் செய்யாத பெண்ணை ஆண்களால் உள்ளூர விரும்பவும் முடிவதில்லை. இந்த விசித்திர முரண்களைப் புரிந்துகொள்ளுதல் இலக்கியத்தில் அவரவர் சார்பைப் பொறுத்தது. அதனால் சமகாலத்தில் படிக்க வேண்டிய படைப்பில் தவிர்க்க முடியாததாக வெண்ணிற இரவுகள் இருக்கிறது. – அனோஜன் பாலகிருஷ்ணன். வெண்ணிற இரவுகள் – தரமான தாள், சிறப்பான அச்சு, நேர்த்தியான புத்தக வடிவமைப்பு, மிக அழகான அட்டைப்டம், நல்ல பைண்டிங் தரம், எளிய குறைந்த விலை மற்றும் மேம்படுத்தப்பட்டப் பிழைகளற்றப் புதிய பதிப்பு என்று பல்வேறு சிறப்புகளுடன் ‘தமிழ்வெளி’ வெளியீடு இன்றைய தலைமுறைக்குத் தகுந்த வகையில் இந்நூலை வெளியிட்டுள்ளது. VENNIRA IRAVUGAL – Tamizhveli Publishing has published this book with a variety of qualities for different generations, including high-quality paper, outstanding print, a sophisticated book layout, a lovely cover, good binding, a straightforward reasonable price, and an enhanced, error-free new version.

Publisher ‏ : ‎ Tamizhveli (1 January 2020)
Language ‏ : ‎ Tamil
Paperback ‏ : ‎ 128 pages
ISBN-10 ‏ : ‎ 8194455138
ISBN-13 ‏ : ‎ 978-8194455134
Reading age ‏ : ‎ 10 years and up
Country of Origin ‏ : ‎ India

Scroll to Top