கண் பேசும் வார்த்தைகள்… (Tamil Edition)


Price: ₹125.00
(as of May 07, 2024 08:49:25 UTC – Details)



“அடுத்த வாரமே அமெரிக்கா போகணும். புது ப்ராஜக்ட் வந்திருக்கு தாரா!”
“எப்ப திரும்பி வருவீங்க?”
“இது பதினெட்டு மாச ப்ராஜக்ட் தாரா!”
“ஒண்ணரை வருஷமா?”
“ஆமாம்! இதை முடிச்சுட்டுத் திரும்பி வந்தா, வாய்ப்புகள் அதிகம். எதிர்காலம் பளிச்சுன்னு இருக்கும் தாரா!”
“இதை நான் எதிர்பார்க்கலை மகேஷ்!”
“உனக்கு இதுல சந்தோஷம் இல்லையா தாரா?”
அவள் பேசவில்லை.
“ஏன்மா?”
“ரெண்டு பேரும் விரும்பறதை வீட்ல இன்னும் தெரிவிக்கல”
“நான் திரும்பி வந்தபிறகு சொல்லிக்கலாம். உடனடியா கல்யாணத்தையும் நடத்திடலாம். என்ன சொல்ற?”
“அது கஷ்டம் மகேஷ் எனக்கு நாள் தள்ளிப் போகுது. இன்னிக்கு முப்பத்தி எட்டு நாளாச்சு. டிசம்பர் 20ம் தேதி ரெண்டு பேரும் பட்ட அவசரம் இப்ப வேற மாதிரி வந்திருக்கு!”
மகேஷ் முகத்தில் சிரிப்பு ஒரு நொடி தொலைந்தது.
“உடனடியா வீட்ல சொல்லி, நம்ம கல்யாணத்தை முடிச்சே ஆகணும் மகேஷ்!”
“நான் அமெரிக்கா போறதுக்குள்ளேயா?”
“ஆமாம்.”
‘எப்படி தாரா? ஒரு வாரத்துல கல்யாணமா?”
“ஏன் முடியாது? கோயில்ல வச்சு சிம்பிளா நடத்திட்டு, ரிஜிஸ்டர் பண்ணிக்க முடியாதா? நான் உங்க கூட வரலை. இங்கியே இருத்துக்கறேன். நானும் வேலையை விட முடியாது. நீங்க திரும்பி வரும்போது உங்க குழந்தை தவழ்றதைப் பார்க்கலாம்…”
“தாரா வீட்ல இதைப்பற்றி ரெண்டு பேருமே எதுவும் பேசலையே?”
“பேச சந்தர்ப்பப்படலை!”
“இப்பவும் அப்படித்தான் தாரா! எங்கக்கா கல்யாணம் முடியாம இதை எப்படி தான் சொல்ல முடியும்?”
“சொல்லித் தான் ஆகணும் மகேஷ்!”
“இல்லை தாரா! எதுக்குமே அவகாசம் இல்லை. நான் சொல்றதைக் கேளு. இதைக் கலைச்சிடு. ரெண்டு பேருக்குமே அதுதான் நல்லது…”
“வேண்டாம் மகேஷ்! ஒரு நாலாந்தர அயோக்கியன் பேசற மாதிரி நீங்க பேசக் கூடாது!”
“நிறுத்து தாரா. வார்த்தைகளை விடாதே, நான் பிராக்டிகலா போறேன், ஒரு கல்யாணத்தை எல்லோரும் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டு சந்தோஷமா நடத்தணும். அதுக்கான சூழ்நிலை இப்ப இல்லை.”
“அப்படீன்னா, நீங்க அமெரிக்கா போகாதீங்க!”
“என்ன உளர்ற? பதினெட்டு மாசத்துல இருபது லட்சத்துக்கு மேல நான் கொண்டுவர முடியும். அதை விடலாமா?”
“அந்தப் பணம் உங்கக்கா கல்யாணத்துக்கு, உங்க குடும்ப பிரச்னைகளுக்கு உதவும். எனக்கு பதினெட்டு மாசத்துல மிஞ்சப் போறது அவமானம்தான், புருஞ்சுக்குங்க மகேஷ்!”
“அதுக்குத்தான் சொல்றேன், கலைச்சிடுன்னு, எந்தச் சிக்கலும் இல்லை…”
“இப்ப இப்படிச் சொல்ற நீங்க, திரும்பி வந்தப்புறம் என்னை ஏத்துக்குவீங்கன்னு என்ன நிச்சயம்?”
“என்ன பேசற தாரா நீ?”
“நான் கலைக்க முடியாது மகேஷ். உங்க வீட்ல நீங்க பேசலைன்னா நான் வந்து பேசுவேன். இன்னிக்கு எங்க வீட்ல நான் பேசிட்டு, நாளைக்கு உங்க வீட்டுக்கு வரப்போறேன். அழுதுக்கிட்டு நிக்க நான் அந்தக் காலப் பெண் இல்லை. புரியுதா?”
மகேஷ் ஆடிப் போனான்.

ASIN ‏ : ‎ B0CXDZK36J
Publisher ‏ : ‎ Geeye Publications (21 March 2024)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1587 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 84 pages

Scroll to Top