Naanum Mazhaiyaanen Part 2: நானும் மழையானேன் 2 (NM2) (Tamil Edition)

Naanum Mazhaiyaanen Part 2: நானும் மழையானேன் 2 (NM2) (Tamil Edition)


Price: ₹400.00
(as of Apr 11, 2024 09:16:48 UTC – Details)



Amazon Kindle வாசக நெஞ்சங்களுக்கு…

உங்கள் விஜயஸ்ரீ பத்மநாபனின்

வணக்கங்கள்…

நானும் மழையானேன்!!!

சாதாரணமாக கதையின் நாயகிகள் என்றாலே ஸிரோ சைசில் இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்து,குண்டா இருக்கற நாயகியை போட்டு, கதையை சுவாரசியமாக குடுத்தவர் திருமதி.விஜயஸ்ரீபத்மநாபன்..

பூந்தமிழ்அரசி: அப்பா இல்லாத குடும்பத்தில், மூத்தமகளாக இல்லாமல் மகனாக இருந்து அம்மா மற்றும் இரண்டு தங்கைகளை தாங்குபவள்..

கல்லூரியில் தமிழ்பேராசிரியை, தங்கைகளுக்கு தகப்பனாக இருந்து கல்யாணம் செய்து வைத்து அவர்களுக்கு கணக்கில்லாமல் சீர் செய்து அழகு பார்ப்பவள் , அன்பானவள், அப்பாவி..

யோகமுரளி: இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர், கண்டிப்பாவன், தினமும் மூன்று கோட் மேக்அப் போடுபவன் ..

கணக்கு பார்த்து செலவுசெய்பவன்…

அன்பு செலுத்த தெரியாதவன் …

பிரேமா: தமிழ்,தாரணி,ஹரிணி என்ற மூன்று பெண்களின் தாய், கணவன் இல்லாமல் பெண்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர்..மாப்பிளை யோக முரளியின் முதல் விசிறி ..

மூர்த்தி: யோகியின் அப்பா, பாசமிகு தந்தை,மருமகளை மகளாய் பார்ப்பவர் ..கிராமத்துமனுஷர் , ஓல்ட்ஏஜிலியும், யூத்தாக சுத்துபவர் ..

ராஜி: யோகியின் தாய்? சிறு வயதில் பிள்ளை புருஷனை விட, அவரது வளமான வாழ்வு பெரியதுஎன்று சென்றவர், அந்த வாழ்வில் சந்தோசமாகாரா??

ஜெயா : மூர்த்தியின் இரண்டாவது மனைவி,வெள்ளந்தியான கிராமத்து மனுஷி, யோகி தமிழிடம் இவர் காட்டும் பாசம் அலாதியானது ..

தாரணி,மோகன், ஹரிணிமுத்துகுமார்,ராஜிம்மாவின் மகள் யஷு , இவர்களது பாத்திர படைப்பும்,அதை கொண்டச்சென்றவிதமும் அருமை..

இதில் வரும் “அகல்” பயிற்சி மையம் போல், அனைத்து மாவட்டத்திற்கும் ஒன்று இருந்தால், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுவார்கள்…

கண்டிப்பான யோகிக்கு தமிழை பார்த்தவுடன் பிடித்து கல்யாணமும் நடந்துவிடும் ..

சோம்பேறிதமிழம்மா, சுறுசுறுப்பு திலகம் யோகி, எதுக்கும்அசராதவனை அசரடிக்கும் ஒரே ஆயுதம் தமிழின் கண்ணீர்!!!

இருவருக்கும் பருவம் தப்பிய திருமணம் , ஆனால் அவர்களது ஊடல் காதல் அழகோ அழகு!!!

கணவனை தனது அன்பால் கட்டிப்போடும் தமிழ், குடும்ப உறவுகளின் மகத்துவத்தை கணவனுக்கு உணர்த்தும் தமிழ்.. சாதாரணமாக குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை சுவையாக தந்திருக்கிறார் ஆசிரியர்..

யோகி,தமிழ் சண்டையும் அவர்களது சமாதானமும் இயல்பாக நம்மை கதைக்குள் இழுக்கிறது ..

கதையில் அதீத கற்பனை இல்லை ,இயல்பான ஒரு குடும்ப பின்னணியில் கதை நகர்கிறது …

அப்பா,அம்மா பாசம் இல்லாமல் தாத்தாவிடம் வளர்ந்தவன் யோகி, வறண்ட பாலைவன யோகியின் வாழ்வில் சிறு துளியாய் வந்து , தூறலாக பெருகி ரெண்டு வாரிசைகளையும் குடுத்து, அவனது உறவுகளையும் தந்து , தன் அன்பு மற்றும் காதல் என்ற மழையால் யோகியை குளிர்வித்தாள் தமிழ்..

குரங்கு கிரீம், சிட்டுகுருவி லேகியம்,

நீர் யானை,பெண்களின் தேசிய உடை நைட்டி, எப்பவும் மறக்க முடியாது..

மழையில் நனைந்தால் எப்படி ஒரு சந்தோஷம்,சுகம் மனதில் கிடைக்குமோ , அதே போல் ஒரு சந்தோஷம்,சுகம்

“நானும் மழையானேன்” படிதத்தில் கிடைத்தது..

திருமதி மலர் இந்திரா ஜெகதீஷ்

From கத்தார்

நன்றி kodi Malar Indira ப்ரோ

..,😘😘😘

ASIN ‏ : ‎ B07KNJC2Y8
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 716 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 350 pages

Scroll to Top