தாய் பிறந்தாள்! (Tamil Edition)


Price: ₹125.00
(as of Apr 28, 2024 22:23:12 UTC – Details)



“அத்தே! எனக்கு டயமாச்சு! டிபன் எடுத்து வை!”
அருணா பரபரப்புடன் உடைகளை மாற்றிக் கொண்டு உணவு மேஜைக்கு வந்தாள்.
“வந்துட்டேன் அருணா”
அத்தை சூடு பறக்கும் இட்லிகளை எடுத்துக் கொண்டு வந்தாள்.
“ரெண்டு வை அத்தே!”
“சூடா இருக்கு. உனக்குப் புடிச்ச தக்காளிச் சட்னி அரைச்சிருக்கேன். இன்னும் ரெண்டு சாப்பிடு!”
“இல்லை அத்தே! நீ பாட்டுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டுர்ற சதை போடத் தொடங்கியாச்சு எனக்கு. கொஞ்சம் காலைல ஜாகிங் போகணும்.”
“பொம்மனாட்டி கொஞ்சம் பூசினமாதிரி இருந்தாத்தான் அழகு! எலும்பும், தோலுமா இருந்தா என்ன வசிகரம்?”
அருணா மொபெட் சாவியை எடுத்துக் கொண்டாள்.
“ஆபிஸ்ல நிறைய வேலை! சாயங்காலம் ஏ.ஜி.யெம் கூட மீட்டிங். வர ராத்திரி ஒன்பதாகும். எனக்கு சாப்பாடு வேண்டாம். நீ சாப்பிட்டு படுத்துக்கோ அத்தே!”
அருணா அவசரமாக வாசலில் இறங்கி வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
ஒரு நொடியில் தெருக்கோடியில் இருந்தாள்.
அத்தை உள்ளே வந்து கதவைத் தாளிட்டாள்.
புயலடித்து ஓய்ந்ததைப் போலிருந்தது.
வீடு போட்டது போட்டபடி இருந்தது. அதையெல்லாம் ஒரு மாதிரி சரி செய்து விட்டு துணி தோய்க்கப் போனாள் அத்தை.
கதவு தட்டப்பட்டது.
“யாரது?” கேட்டபடி வந்து கதவைத் திறந்தாள்.
பக்கத்து வீட்டம்மா.
“வாங்க!”
“காஸ் தீர்ந்து போச்சு. உங்ககிட்ட டபுள் சிலிண்டர் தானே?”
“ஆமாம். ஆனா தீரக் கூடிய நிலமைல இருக்கு. உங்களுக்குத் தந்தா, நான் மாட்டிப்பேன்!”
“சரி வேண்டாம். புக் பண்ணி பதினஞ்சு நாளாச்சு. அருணா போயாச்சா?”
“ம்!”
“அருணாவுக்கு என்ன வயசு?”
“வர்ற ஆவணிக்கு இருபத்தி அஞ்சு!”
“கல்யாணத்துக்குப் பாக்க கூடாதா?”
“அவ காதுல போட்டுக்கிட்டாத்தானே! ஆபீஸ், வேலைனு அலையறா. கல்யாணப் பேச்சை எடுத்தாலே அவ தலையாட்டறதில்லை!”
“அதுக்காக? எத்தனை நாள் வீட்ல வச்சிருக்கப் போறீங்க?”
“தெரியலை!”
“எங்க அண்ணன் பையன் துபாய்ல இருக்கான். அடுத்த வாரம் லீவுல வர்றான். அருணாவைப் பார்க்கலாமா?”
“முதல்ல அவகிட்ட நான் பேசிப் பார்க்கறேன். அப்புறமா உங்ககிட்டப் பேசறேன்!”
“சரிங்க”
அந்தம்மா போய் விட்டாள்.
அத்தை தன் வேலைகளை முடித்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்த போது மணி பன்னிரண்டு.
கதவு தட்டப்பட்டது.
“திரும்பவும் யாரது?”
திறந்தாள்.
அருணா நின்று கொண்டு இருந்தாள்.
“என்னம்மா?”
“எங்க ஆபீஸ் நிறுவனர் ஒருத்தர் செத்துப் போயிட்டார், அத்தே! லீவு. விட்டுட்டாங்க!”
“நல்லதாப் போச்சு!”
“எது? நிறுவனர் செத்ததா?”
“அதில்லடி! உனக்கு இப்படி கிடைச்சாத்தான் ரெஸ்ட்!”
அருணா சிரித்தாள்.
கைப்பையை தூக்கி எறிந்தாள்.
“அத்தே சூடா, ஸ்ட்ராங்கா ஒரு காபி போடு!”
“இரு! போட்டு எடுத்துட்டு வர்றேன்!”
அத்தை உள்ளே போனாள். சில நிமிடங்களில் மணக்கும், ஆவி பறக்கும் காபி.
“நீ இதைக்குடி! அதுக்குள்ள நான் சாப்டுட்டு வந்துர்றேன்!”
அருணா காபியைக் குடித்து விட்டு நைட்டிக்கு மாறினாள். அத்தை சாப்பிட்டு முடித்து வந்தாள்.
“இன்னிக்கு அதிசயமா வீட்ல இருக்கே! மத்யானம் சூடா சமோசா போடட்டுமா?”
“சரி அத்தே!”
“கிழங்கு வேகப் போடணும்!”
“இரு அத்தே! லேட்டாப் போட்டுக்கலாம். பம்பரமா சுத்திக்கிட்டே இருப்பியா? உனக்கென்ன வயசு?”
“அம்பது!”
“உன்னைப் பார்த்தா அப்படித் தெரியலை!”
அத்தையை நெருங்கி கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“அருணா”
“சொல்லு அத்தே”
“உங்கப்பா, அம்மா அந்த ரயில் விபத்துல சாகும்போது உனக்கு அஞ்சு வயது”
“சரியா ஞாபகம் இல்ல அத்தே”
“அன்னிக்கு என் பொறுப்புல வந்தவள் நீ”
“என்னிக்கும் உன்னோட இருக்கணும்னு என் தலைல எழுதியிருக்கு. யாரால மாத்த முடியும்?”
கிண்டலடித்தாள்.
“அருணா உனக்கு இருபத்தஞ்சு வயசு!”
“கொண்டாடலாமா அத்தே?”
“ம்! கழுத்துல ஒரு தாலியைக் கட்டிட்டு உன் புருஷனோடக் கொண்டாடு.”
அருணாவின் முகம் மாறியது.
“ஜாலியா இருந்தா மூடைக் கெடுத்துடுவே நீ”
“அருணா! நான் சீரியஸா பேசறேன். இனிமே தள்ளிப் போட எனக்குப் புடிக்கலை, உனக்கொரு கல்யாணத்தை நான் செஞ்சு வச்சாகணும்.”
“வேண்டாம் அத்தே”
“ஏன் வேணாம்? பொண்ணாப் பொறந்தா ஒரு கல்யாணம் தேவைதான். அப்படி செஞ்சுகிட்டாத்தான் வாழ்க்கைல ஒரு முழுமை”
“அப்படியா அத்தே? நீ கல்யாணம் செஞ்சுகிட்டு எத்தனை வருஷம் வாழ்ந்தே?”
“அருணா”
“அடுத்த வருஷமே உன் புருஷன் செத்துப் போய் எங்கப்பா பராமரிப்புல வந்ததா நீ தானே சொல்லியிருக்கே”
“அது என் தலைவிதி”

ASIN ‏ : ‎ B0CXMHYZWF
Publisher ‏ : ‎ Geeye Publications (1 April 2024)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1608 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 126 pages

Scroll to Top