விழியால் தொட்ட அழகே (Tamil Edition)

விழியால் தொட்ட அழகே (Tamil Edition)


Price: ₹449.00
(as of Mar 29, 2024 03:47:51 UTC – Details)


தலைகுனிந்து அவனது தாலியை ஏற்றுக் கொண்டவளின் விழிகளிலிருந்து விழுந்த இரு சொட்டு கண்ணீர் அவனது மணிக்கட்டில் வந்து விழவும் தான், அவள் ஏதோ இக்கட்டில் இருப்பதாய் எடுத்து காட்டியது, தாலி கட்டும் நேரத்தில் பல பெண்களுக்கு கண்ணீர் வர தான் செய்யும், ஆனால் அது சந்தோசத்தில் தன் மனதை கொள்ளைக்கொண்டவனை கைபிடித்து விட்டோம் என்ற ஆத்ம திருப்தியினால் வரும், ஆனால் இம்மணமகளுக்கோ தன் விருப்பம் இலலாமல் ஒருவனின் கையால் தன் கழுத்தில் தாலி ஏறுகிறதே என்ற வலியிலும் விரக்தியிலும் கண்ணீர் வடிந்தது, அவள் நித்யஸ்ரீ நம் கதையின் நாயகி,…

அவளது கண்ணீரை அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, சின்ன முறுவலுடன் மூன்றாவது முடிச்சையும் ஸ்ட்ராங்காக முடிந்தவன், அவள் நெற்றி வகிட்டிலும், அவன் கட்டிய மாங்கல்யத்திலும் குங்குமத்தை வைத்து விட்டான் புரோகிதர் கூறியது போல்,…

அவள் தளிர் கரத்தை பற்றி அவளுடன் சேர்ந்து அக்னியை வலம் வந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அவளது பொன் காலில் மெட்டியை அணிவிக்கும் ஒவ்வொரு சடங்கிலும் ரிஷிமித்ரனின் இதழ் புன்னகை மாறாமல் அழகாக முறுவழித்து கொண்டிருந்து, ஆனால் நித்யஸ்ரீயின் முகத்திலோ அத்தனை கலக்கம், பேருக்கு கூட அவள் இதழில் புன்னகை வரவில்லை, ரோபோ போல் அனைத்தையும் இயந்திரதனமாய் செய்தாலும், மனம் நீ வேறொருவனின் மனைவியாகிவிட்டாய் என்று கூக்குரலிட்டு கொண்டே இருந்தது,…

ASIN ‏ : ‎ B0BKY543DQ
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1212 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 341 pages

Scroll to Top