மனசுக்கு மட்டும்! (Tamil Edition)

மனசுக்கு மட்டும்! (Tamil Edition)


Price: ₹99.00
(as of Mar 10, 2024 13:50:06 UTC – Details)“அம்மா! நான் ஆபீஸ் போயிட்டு வர்றேன்!”
வந்தனா புறப்பட்டாள்.
பெரியவள் கீர்த்தனா உட்கார்ந்து எங்கோ பராக்கு பார்த்தபடி இட்லியை உருட்டிக் கொண்டிருந்தாள்.
“வந்தனா! கொஞ்சம் உள்ள வா!”
“என்னம்மா?”
“அருண் நாலஞ்சு நாளா சரியா சாப்பிடறதில்லை! காலை சீக்கிரமே புறப்பட்டு போயிர்றான். நேரம் கழிச்சே வீடு திரும்பறான். முகத்துல சிரிப்பே இல்லை! ஏண்டீ?”
“எங்கிட்ட கேட்டா? உள் பிள்ளைதானே? நீயே கேளேன்!”
“தோளுக்கு உசந்த பிள்ளை! சுள்ளுனு ஒரு வார்த்தை வந்து விழுந்துட்டா, என்னால் தாங்கிக்க முடியுமா?”
“அப்பப் பேசாம. இரு. அண்ணனே சொல்லும்போது கேட்டுக்கோ!” புறப்பட்டுவிட்டாள்.
அவள் போய் அரைமணி நேரத்தில் அருண் ஆபீசிலிருந்து ஒருவன் வந்தான்.
“அருண் ஆபீஸ்ல மயங்கி விழுந்துட்டார். அவரை ஆஸ்பத்திரில் சேர்த்திருக்கோம்!”
“அய்யோ என்னாச்சு என் அருணுக்கு?”
“என்னோட வர்றீங்களா?”
அம்மா திகைத்தாள்.
கீர்த்தனாவை தனியாக விட்டுவிட்டுப் போக வழியில்லை! இதுவரை போனதும் இல்லை!
“அந்த ஆஸ்பத்திரி விலாசம் குடுங்க தம்பி! நாள் வந்து சேர்ந்துடறேன்!”
அவள் தந்து விட்டுப் போக, எதிர் வீட்டுக்கு வந்து, அவசரமாக வந்தனாவுக்கு போன் செய்தாள். விபரம் சொன்னாள்.
வீட்டுக்குள் வர,
“அம்மா! தலையைப் பின்னி விடு!”
“போடி! உனக்கு அலங்காரம் ஒரு கேடா? பேசாம இரு!”
கீர்த்தனா முகம் வாட, அம்மா உள்ளே போக, அரை மணி நேரத்தில் வந்தனா வந்து விட்டாள்.
அம்மா அழத் தொடங்க,
“நீ ஏம்மா இப்ப அழற, அண்ணனுக்கு எதுவும் ஆகாது! அக்காவை வச்சுப் பூட்டிட்டு போயிடலாம்!”
“அவ கதவைத் தட்டி ரகளை பண்ணினா?”
“பண்ணமாட்டா, நான் பக்குவமா சொல்லிக்கிறேன். நீ வேண்டியதை எடுத்து வச்சுவிட்டு தயார் பண்ணிக்கோ!”
அக்காவிடம் வந்தாள் வந்தனா.
“அக்கா!”
“அய்! சாயங்காலம் ஆயாச்சா?”
“ஆமாம்! நாளைக்கு உனக்குப் பிறந்த நாள். ஸ்வீட் பண்ணி, புதுத்துணி எடுக்கணும் இல்லையா? நானும், அம்மாவும் கடைவீதி வரைக்கும் போயிட்டு வந்துடுறோம். வெளிய பூட்டிட்டுப் போறோம்! நீ ஆர்ப்பாட்டம் பண்ணாம பத்திரமா இருப்பியா?”
“நானும் வர்றேண்டீ!”
“சரி வா! ஆனா கடைவீதில நிறைய பலூன் இருக்குமே!”
அவள் முகத்தில் உடனே மிரட்சி!
“வேண்டாம்! நான் வரல!”
“அப்ப நாங்க போயிட்டு வரட்டுமா?”
“சரி”
இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.
மருத்துவமனையை அடையும்போது ஊசி மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தான் அருண். ட்ரிப்ஸ் போய்க் கொண்டிருந்தது. வந்தனா டாக்டரின் கேபினுக்குள் வந்தாள்.
அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“ஏன் டாக்டர்? என்ன ஆச்சு?”
“மயங்கி விழுந்துட்டார்னு கொண்டு வந்து சேர்த்தாங்க! ரத்த அழுத்தம் நிறைய இருக்கு, டென்ஷன்படுவாரா?”
“இல்லையே!”
“ஆனா ஏதோ சுமை இருக்கு அவர் மனசுல! அது வெளில வரலைன்னா, ஹார்ட் அட்டாக்கே வரலாம்!”
“அய்யோ!”
“மூணு நாள் இங்கே இருக்கட்டும்! ஆபத்து எதுவும் இல்லை!”
மாலை ஆறு மணி சுமாருக்கு அருண் சுமாராகத் தெளிந்து உட்கார, வந்தனா அருகில் வந்து உட்கார்ந்தாள்.
“ஏன் திடீர்னு மயக்கம்? என்ன டென்ஷன் உனக்கு?”
அருண் பதில் சொல்லாமல் அவளையே பார்க்க,
“அருண் என்னாச்சு உங்களுக்கு?” கேட்டபடி பதட்டமாக உள்ளே நுழைந்தாள் நீரஜா. பின்னால் அவள் அப்பா.
வந்தனா எழுந்து நின்றாள்.
நீரஜா சுவாதீனமாகக் கட்டிலில் வெகு நெருக்கமாக அவனருகில் உட்கார்ந்து கொண்டாள்.

ASIN ‏ : ‎ B0CSBHZ8VL
Publisher ‏ : ‎ Geeye Publications (13 January 2024)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1944 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 133 pages

Scroll to Top