திருமகள் தேடி வந்தாள்… (Tamil Edition)

திருமகள் தேடி வந்தாள்… (Tamil Edition)


Price: ₹149.00
(as of Apr 08, 2024 08:27:18 UTC – Details)



அன்று ஞாயிற்றுக் கிழமை!
ஆனாலும், பூவிழிக்கு எப்போதும் போலவே… வைகறையிலேயே விழிப்பு வந்துவிட்டது.
அறையின் சன்னலைத் திறந்து வெளியே எட்டி நீலவானத்தைப் பார்த்தாள்.
வானி… வெண்மேகங்கள், கருமேகங்களையெல்லாம் ஊடுருவி… நிலவுப் பெண், உல்லாசமாய் மேற்கு மலையை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தாள்.
அந்த அழகிய காட்சியில் பூவிழியின் உள்ளம் பறிபோனது.
மேல் மாடியின் முன்புறம் வீடும்… அதைத் தொடர்ந்து பரந்து விரிந்த நீண்ட மொட்டை மாடியும் இருந்தது. அங்கு பூவிழி வைத்திருந்த தொட்டிச் செடிகளில் பூத்த ரோஜாக்களும்… மல்லிகைகளும்… முல்லைக் கொடிகளில் அரும்பிய மொட்டுக்களும் இதழ் விரித்து ஏராளமான நறுமணத்தை வள்ளல்களாய் வாரி வழங்கிக் கொண்டிருந்தன.
அந்த நறுமணங்களும்… தென்றலும் கைகோத்துக் கொண்டு வந்து… பூவிழியின் நாசியைத் தொட்டது.
அந்த நறுமணத்தை உள்ளிழுத்து ஆழ சுவாசிக்க உடலுக்குப் புத்துணர்ச்சி வந்தது.
பூவிழி… அழகி!
இல்லையில்லை, பேரழகி!
அவளுக்கு அழகிய குண்டு முகம்!
அதில் மீன்குஞ்சுகளாய்… இரு நீண்ட கரிய பெரிய நயனங்கள்!
முடிகள் அடர்ந்த சிப்பி இமை!
இந்துவைப் போன்ற நுதல் (நெற்றி)!
இராமனின் கையில் தவழும் நாணேற்றிய வில்லாய் இரு புருவங்கள்!
கூர்மையான நாசி!
தாமரையைப் பிய்த்து ஒட்ட வைத்தாற் போன்ற இளம் ரோஸ் நிற இதழ்கள்!
அவ்விதழ்களுக்குள்ளே முத்துக்களைப் பதித்து வைத்தாற் போன்ற பல் வரிசைகள்!
காஷ்மீர் ஆப்பிளை வெட்டி வைத்தாற் போன்ற கதுப்புக் கன்னங்கள்!
சங்குக் கழுத்து! அதற்குக் கீழே அழகான அங்கலாவண்யங்கள்!
சிறுத்த கொடியிடை!
சிற்பம் போன்ற செதுக்கிய மேனி!
கறுத்தடர்ந்த கார் கூந்தல் முட்டிக்குக் கீழே தொங்கும்!
பாலோடு மஞ்சளையும், சந்தனத்தையும் கலந்து குழைத்த நிறம்!
இருபத்தைந்து முடிந்து இருபத்தாறு வயது தொடக்கம்.
பூவிழி முதுகலை இயற்பியல் ஆசிரியை.
அவள் எம்.எஸ்ஸி. பி.எட்., முடித்தபோது அறிவித்த டி.ஆர்.பி. டெஸ்டிற்கு கடுமையாக உழைத்தாள். அவள் உழைப்பு வீண் போகவில்லை.
முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று விட்டாள்! திண்டிவனம் அரசுப் பள்ளியில் வேலையும் கிடைத்து விட்டது.
அவள் ஊர் விழுப்புரம்! தினந்தோறும் திண்டிவனம் சென்று திரும்புவாள்.
அவளுக்கு முன்பிருந்த இயற்பியல் ஆசிரியர் எழுபது, எண்பது விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி காட்டியதில்லை.
பூவிழி பணியேற்று… கடுமையாக உழைத்து… பணியேற்ற ஆண்டே… நூறு சதவீதத் தேர்ச்சியைத் தந்து ஆச்சரியப்பட வைத்து விட்டாள்.
மற்ற வேதியியல், கணிதம் போன்ற ஆசிரியர்கள் எழுபது, எண்பது விழுக்காடுதான் தந்தனர்.
பள்ளியின் முழுத் தேர்ச்சி எண்பத்து ஐந்து.
அத்தனை பேரும் முதலில் பொறாமை கொண்டனர். பின்னர் பொறாமையை விட்டு… அவளின் கல்வி கற்பிக்கும் முறை, தேர்வு முறைகளைக் கேட்டு… தாங்களும் கடைப்பிடித்தனர். அவளோடு போட்டி போட்டுப் பாடத்தை நடத்தினர்.
விளைவு அடுத்த ஆண்டே அனைவரும் தொண்ணூற்று ஐந்து சதவீதம் தந்தனர். ஆனால், பூவிழியோ அதே நூறு சதவீதத் தேர்ச்சியைத் தந்தாள்.
இந்தக் கல்வியாண்டு மேலும் முயற்சிக்கின்றனர், பூவிழியோடு இணைந்து.
பள்ளியின் பத்து, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியை நூறாக்கிவிட முயற்சிக்கின்றனர்.
பாடத்தை முடித்து விட்டாள்.
தினம் தினம் படிப்பும், கூடவே சிறுசிறு தேர்வுகளும் நடத்திக் கொண்டிருக்கிறாள், பூவிழி.
தினம் பேப்பர் திருத்தும் வேலையிருக்கும்.
நாலரைக்குப் பள்ளி முடிந்தாலும்… பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஐந்தரை வரை ஸ்பெஷல் க்ளாஸ் உண்டு. ஆனால், இவர்கள் மேலும் அரை மணி நேரம் கூட்டிக் கொள்வார்கள்.
பின், பஸ் பிடித்து வீடு வந்து சேர ஏழாகிவிடும்! பின் அந்தப் பகுதி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தனிப் படிப்புச் சொல்லித் தருவாள்.
அத்தனை பேரும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், அவர்களின் முன்னேற்றத்திற்காக இலவசமாய்த் தனிப் படிப்பு சொல்லித் தருகிறாள். இயற்பியலோடு மற்றப் பாடங்களையும் சொல்லித் தரும் திறமையுள்ளவள், பூவிழி.
அதன் பின்பு உணவு சமைத்து, பெற்றோரோடு உண்டுவிட்டுச் சிறிது நேரம் படிப்பாள். பின் உறங்கிப் போவாள்.
மறுநாள் விடியலில் தான் பேப்பரை எடுத்துக் கொண்டு உட்காருவாள். பேப்பரைத் திருத்துவாள்.
இன்றும் பேப்பர் கட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
திருத்தி முடிக்கும் போது பலபலவென விடிந்து விட்டது.

ASIN ‏ : ‎ B0CZP8X2BX
Publisher ‏ : ‎ Geeye Publications (1 April 2024)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 673 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 147 pages

Scroll to Top