கொஞ்ச(ம்) வா! (Tamil Edition)

கொஞ்ச(ம்) வா! (Tamil Edition)


Price: ₹99.00
(as of Mar 08, 2024 09:34:23 UTC – Details)காரை விட்டு அந்த மருத்துவமனை வாசலில் இறங்கினார்கள். அப்பா, அம்மா, சாதனா.
ஏற்கனவே விவரம் சொல்லப்பட்டதால் சாதனாவையும் அழைத்துப் போனார்கள்.
அது ஒரு மென்டல் க்ளினிக்.
அப்பா, அம்மா அனுமதி பெற்று உள்ளே நுழைய,
டாக்டர் தேவராஜன் வரவேற்றார்.
அப்பா டாக்டரின் கடிதத்தைத் தர, படித்தார் தேவா. தொலைபேசியிலும் தகவல் வந்திருந்தது.
“கூட்டிட்டு வாங்க!” பெல் அடிக்க,
நர்ஸ் ஒருத்தி அழைத்து வந்தாள் சாதனாவை. “விக்னேஷ்! நீங்க இங்கயா இருக்கீங்க?”
“ஆமாம் சாதனா! உனக்காக எத்தனை நேரம் காத்துகிட்டு இருக்கேன் தெரியுமா?”
“ஏய் நீ யாரு? எதுக்காக எனக்காக நீ காத்துகிட்டு இருக்கணும்?” ஆவேசமாக எழுந்தாள் சாதனா.
டாக்டர் கண் அசைக்க, நர்ஸ் சட்டென ஊசி போட்டாள். சாதனா மயங்க, “வெல்! அட்மிட் பண்ணிடுங்க!”
“டாக்டர், ரொம்ப அதிகமா இருக்கா?”
“அதிகம், குறைச்சல்னெல்லாம் எப்படி அளக்க முடியும்? ஆனா பலமான அதிர்ச்சி உண்டாகியிருக்கு. இவங்க வொர்க் பண்ற பேங்க்ல, இவங்களுக்கு ரொம்ப நெருக்கமானவங்க. யார் யாரு?”
“சுந்தரினு ஒரு பொண்ணு ரொம்ப நெருக்கம். அதுதான் வீட்டுக்குக்கூட சிலசமயம் வரும்!”
“அந்த சுந்தரியை இங்கே கூட்டிட்டு வர முடியுமா?”
“சரி டாக்டர்!”
“நிறைய ஸ்கேனெல்லாம் எடுக்கணும். நீங்க ரெண்டு பேரும் புறப்படுங்க! அந்த சுந்தரியை உடனடியாக நான் பார்த்தாக்கூடத் தேவலை!”
“பேங்க் பத்து மணிக்கு ஆரம்பம். நான் போய் கூட்டிட்டு வர்றன் டாக்டர்!”
“நல்லது!”
இருவரும் வீடு திரும்பினார்கள்.
அம்மா அழத் தொடங்கினாள்.
“அய்யோ! கல்யாண வயசு சாதனாவுக்கு. இந்த நேரத்துல பைத்தியமா? என்னங்க இது? எப்படி?”
“தெரியலை கமலா! ஆனா நம்மகிட்ட எதையோ மறைச்சிருக்கா, நம்ம பொண்ணு!”
“ஏன்?”
“ஒரு வேளை அந்த சுந்தரிக்குத் தெரிஞ்சிருக்கலாம்! கடவுள்தான் அவ ரூபத்துல வந்து சாதனாவை மீட்டுத் தரணும்!”
அப்பா ஒன்பதே முக்காலுக்கே வங்கி வாசலில் இருந்தார். சரியாக பத்தேகாலுக்கு மூச்சிரைக்க சுந்தரி ஓடி வந்து கொண்டிருக்க,
“சுந்தரி!”
“அட நீங்களா? சாதனா வரலையா?”
“இப்படி ஒரு நிமிஷம் வாம்மா!”
“என்ன அங்கிள்?”
“நீ லீவு போட்டுட்டு உடனடியாக என்கூட வரணும்!”
“ஏன்?”.
“சாதனாவை உன்னால மட்டும்தான்மா காப்பாற்ற முடியும்!”
“சாதனாவை நான் காப்பாத்தணுமா? என்ன பிரச்சனை அங்கிள் அவளுக்கு?”
“பேச நேரமில்லை! வாம்மா!”
“இருங்க! அஞ்சே நிமிஷத்துல வந்துர்றன்!’“
உள்ளே ஓடினாள்.
பத்து நிமிடங்களானது. வெளிப்பட்டாள்.
“வாங்க அங்கிள்!”
அவர் ஆட்டோவை அழைத்தார். இருவரும் ஏறிக்கொள்ள, அது புறப்பட்டது.
“என்னாச்சு சாதனாவுக்கு?”
“மென்டல் டிப்ரஷன்!”
“எ… என்னது?’
“ஆமாம்மா!” தாழ்ந்த குரலில் சகலமும் அவர் சொல்லி முடித்ததும் சுந்தரி அழுது விட்டாள்.
“யாரம்மா விக்னேஷ்?”
“தெரியலை அங்கிள். சத்தியமா எனக்குத் தெரியலை!”
மருத்துவமனை வந்து விட்டது. டாக்டர் அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள்.
“உட்காருங்க சுந்தரி! உங்களுக்குக் கல்யாணம் ஆயாச்சா?”
“இல்லை டாக்டர்!”
“நீங்க சாதனாவுக்கு நெருங்கின தோழியா?”
“ஆமாம்!”
“சாதனா யாரையாவது காதலிக்கிறாளா?”
“நிச்சயமா இல்லை. இருந்திருந்தா, எனக்குத் தெரியாம இருக்காது! எங்கிட்ட சொல்லுவா!”
“பேங்க் எத்தன மணிக்கு முடியும்?”
“நாலு மணிக்கு முடியும்.”
“சாதனா உடனே போயிடுவாளா?”
“ஆமாம் டாக்டர்!”
“சார்! வீட்டுக்கு எத்தன மணிக்கு வருவா?”
“அஞ்சு மணிக்குள்ள, சில நாள் ஆறு, ஏழுகூட ஆகும்!”
“எங்கே போவா?”
“லைப்ரரி… மெடிடேஷன் க்ளாஸ் இப்படி ஏதாவது போயிட்டு வருவா!”
“நேத்திக்கு எப்ப வந்தா?”
“சாயங்கலாம் ஏழு மணிக்கு!”
“சாதனாவைத் தேடி பேங்க் நேரத்துல பர்சனலா யாராவது வருவாங்களா?”
“இல்லை டாக்டர்!”
“விக்னேஷ்ணு உங்களுக்குத் தெரிஞ்சு யாராவது உண்டா?”
“பேங்க்ல இல்லை. என் வீட்ல இல்லை! சாதனா வட்டத்துல இருக்கறதாத் தெரியலை!”
“ஒ… உங்களுக்கு எப்பக் கல்யாணம்?”
“பார்த்துட்டு இருக்காங்க!”
“சாதனாவுக்கு கல்யாண எதிர்பார்ப்புகள் உண்டா?”
“அவ பேச்சுல அப்படி ஒண்ணும் வெளிப்படலை!”
“அழுத்தமான பெண்ணா?”
“அப்படி சொல்றதுக்கில்லை. ஆனா ரிசர்வ்ட் டைப்தான்!”
டாக்டர் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தார்.

ASIN ‏ : ‎ B0CLFNP7S3
Publisher ‏ : ‎ Geeye Publications (19 October 2023)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 927 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 102 pages

Scroll to Top