இதயவீணை தூங்கும்போது…! (Tamil Edition)

இதயவீணை தூங்கும்போது…! (Tamil Edition)


Price: ₹99.00
(as of Apr 08, 2024 21:44:44 UTC – Details)ஆட்டோவில் வந்து இறங்கியது பானு. அவர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு தன் வாசலைப் பார்த்து வியந்தாள்.
தெருவை அடைத்து ரங்கோலிக் கோலம் போட்டு அதற்கு அழகாக கலர் கொடுத்து காண்போரை கண் பதிக்க வைத்தது அந்தக்கோலம்.
“அம்மா… அம்மா…” என்று செருப்பை வெளியே உதறியவள் வீட்டுக்குள் நுழைந்தாள்.
“பானும்மா… வந்துட்டியா? வா… வா…” என்று சமையற்கட்டில் இருந்து வந்தாள் கோமதி.
“ஏம்மா… நான் இங்கே இருந்தப்போ தூங்கிட்டு இருந்தாலும் எழுப்பி என்னைத்தான் கோலம் போடச் சொல்வே… உனக்கு இவ்ளோ அழகா கோலம் போடத்தெரியும்னு எனக்கு கூட தெரியாதே! ஆனா இப்போ எப்படி பறிக்குது கோலம் எல்லாம்?”
“என்னடி சொல்றே?”
“நம்ம வீட்டு வாசலைப் பார்த்துதான் சொல்றேன்.”
“ஓ… நான் எங்கேடி போட்டேன். எல்லாம் உன் அண்ணாவோட கை வண்ணம்தான்.”
“என்னது அண்ணனா…” என்று வாயைப் பிளந்த பானு… “ஏம்மா! வர்றவ குடுத்து வைச்ச மகராசிதான்.”
“அது சரி! நீ மட்டும் தனியா வந்திருக்கே மாப்பிள்ளை, குழந்தை நிறைமதி இவங்களை கூட அழைச்சிட்டு வரலை?”
“ஐந்து மணிக்கு தானே பெண் பார்க்க போறோம்? குழந்தைக்கு ஸ்கூல் விட்டதும் அவளையும் அழைச்சிட்டு உன் மாப்பிள்ளை நான்கு மணிக்குள்ள வந்துடுவாங்க. உனக்கு ஒத்தாசையா இருக்குமேன்னுதான் நான் முதல்ல வந்துட்டேன்… ஆமா… அண்ணன், அப்பாவை என்ன இன்னும் காணோம்.?”
“அப்பா நண்பர் வீட்டுக்கும் பாலு கடை வீதிக்கும் போயிருக்காங்க. வர்ற நேரம்தான்”
“எத்தனை மணிக்கு போறோம்…?”
“ஐந்திலிருந்து ஆறரைக்குள் நல்ல நேரமாம்.”
“பஜ்ஜி, எதுவும் செய்யணுமா?” என்றாள் பானு.
“அடியேய்! நாம தான் பெண் பார்க்கப் போறோம் நாம எதுவும் பட்சணம் செய்ய வேணாம். பூ, பழம், தாம்பூலம் வாங்கிட்டுப் போனா. போதும். போற இடத்திலும் பஜ்ஜி சொஜ்ஜி எதுவும் கிடையாது”
“என்னம்மா அதையும் அண்ணா வேணாம்னு சொல்லிடுச்சா”
“கோவில்ல வைச்சுதானே பெண்ணும், மாப்பிள்ளையும் பார்த்துக்கப் போறாங்க.”
“ம்… இதுவும் அண்ணனோட ஏற்பாடா… அண்ணன் மாதிரியே ஒவ்வொரு ஆணும் இருந்துட்டா பெண்ணா பிறந்தவங்களுக்கும், பெண்ணை பெற்றவங்களுக்கும் ரொம்ப நிம்மதி”
“ஆளைவிடு! உன் கிட்டே பேச நேரமில்லை! நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்.”
“சரிம்மா நானும் என் தோழி பூவிழியை பார்த்திட்டு வந்திடறேன்.”
“யேய்… பானு! அங்கே போனா உனக்கு நேரம் போறதே தெரியாதே!”
“இல்லைம்மா எப்படியும் நான்கு மணிக்குள்ள வந்திடுவேன். பூவிழி குழந்தை பிறந்து இங்கே அம்மா வீட்ல இருக்கா இல்ல? அதான் போய் பார்த்துட்டு வந்திடறேன்.” என்றவள் தான் கொண்டு வந்த பையிலிருந்து கொஞ்சம் பழங்களை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு செருப்பணிந்து தெருவின் கோடியில் உள்ள தன் தோழி வீட்டை நோக்கி நடந்தாள்.

ASIN ‏ : ‎ B0CP97QWP5
Publisher ‏ : ‎ Geeye Publications (30 November 2023)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 546 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 99 pages

Scroll to Top