இதயத்தில் ஏதோ ஒன்று..! (Tamil Edition)

இதயத்தில் ஏதோ ஒன்று..! (Tamil Edition)


Price: ₹99.00
(as of Mar 11, 2024 08:29:35 UTC – Details)நேரம் காலை ஐந்து ஐம்பது. அப்போதுதான் தலைக்கு குளித்துவிட்டு தலையில் கட்டிய மிருதுவான டவலோடு சத்யா தனது பூப்போன்ற கையினால் புள்ளிகளை இணைத்து ஒரு பூக்கோலம் போட்டுவிட்டு புள்ளிமானாய் வீட்டுக்குள் துள்ளிக் கொண்டு ஓடினாள்.
காலை மணி எட்டு முப்பது. சத்யா கல்லூரி கிளம்பி விட்டாள். எம்.எஸ்.சி. இரண்டாம் வருடம் படிக்கும் மாணவி அவள்… ஏற்கனவே பி.எஸ்.சி. படிப்புடன் பி.எட். படிப்பையும் முடித்திருந்தாள். இப்போது அவள் எம்.எஸ்.சி. படிப்பும் முடியும் தருவாயில்… தேர்வுகள் முடிய இன்னும் பத்து நாட்களே இருந்தன. அதற்கு பிறகு வேலை பார்த்துக் கொண்டு வீட்டில் ஜாலியாக இருக்கப் போகிறாள்.
இப்போது காலை எட்டரைக்கு கல்லூரிக்கு கிளம்பினால் போய் சேர ஒன்பதரை ஆகிவிடும். அதே போல் மாலை மூன்றரைக்கு கல்லூரி விட்டு பஸ் பிடித்து வர ஐந்தரை, ஆறு ஆகிவிடும்.
அவளது ஊர் ஒரு கிராமம் என்பதோடு சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்தால் தான் ‘பாரதி நகர்’ என்னும் நான்கு ரோடு வரும். அங்கே போனால்தான் எந்த ஊருக்கு போக வேண்டுமென்றாலும் பேருந்து கிடைக்கும்.
இந்த நான்குரோடு வரைதான் அவளது கல்லூரிப் பேருந்து வந்து செல்லும். ஆனால், அது 7.30-க்கே சென்று விடுவதால் இவள் வேறு பேருந்தில் தான் கல்லூரி போய் வர முடிந்தது.
இவர்களது கிராமத்திற்கு ஒரு மினி பஸ் மட்டும் வந்து செல்லும். அது காலை 7 மணிக்கு பின்பு ஒன்பது மணிக்குத்தான் வரும். எனவே, சத்யா அவளது சைக்கிளில் பாரதி நகருக்கு வந்து அங்கே அவளது ஊரை சேர்ந்தவர் மளிகை கடை வைத்துள்ளார் அவரது கடையின் ஓரமாக சைக்கிளை நிறுத்தி விட்டு பஸ் ஏறி கல்லூரிக்கு போய் திரும்ப வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருவது வழக்கமாயிற்று.
சத்யாவின் தங்கை சௌமியா வணிகவியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். அருகில் இருக்கும் கல்லூரியாதலால் அவள் ஊருக்குள் வரும் மினி பஸ்ஸில் போய் விட்டு அதிலேயே திரும்பி விடுவாள்.
இவர்கள் இருவரது அண்ணன் சத்யமூர்த்தி அவன் கொஞ்சம் முரட்டு சுபாவம் உடையவன்.
மின் வாரியத்தில் வேலை பார்க்கிறான். அம்மா இல்லத்தரசி, அப்பா பால் நாடார் இரண்டு, மூன்று தோட்டங்களை நிர்வாகம் செய்கிறார். ஊரில் செல்வாக்கான மனிதர், ஊர் பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார்.

ASIN ‏ : ‎ B0CP97DTDY
Publisher ‏ : ‎ Geeye Publications (30 November 2023)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 565 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 104 pages

Scroll to Top